மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான முதுநிலை NEET தேர்வ (NEET PG) தொடர்பான விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) நடத்துகிறது. இது நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள MD, MS மற்றும் PG டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வாகும்.
🔹 விண்ணப்பக்கால அவகாசம்:
விண்ணப்பதாரர்கள், மே 7ம் தேதிக்குள் https://natboard.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
🔹 தேர்வு தேதி மற்றும் மையங்கள்:
NEET PG தேர்வு, ஜூன் 15, 2025 அன்று நாடு முழுவதும் உள்ள 179 நகரங்களில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 17 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ மேற்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், காலஅவகாசத்தை தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.