Kalalagar Thirukalyanam

அழகர் திருக்கல்யாணம் வெற்றிகரமாக நிறைவு – சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் தொடக்கம்!

அழகர் கோவிலில் ஏப்ரல் 11, 2025 இன்று, கள்ளழகர் திருக்கல்யாணம் ஆனந்தமாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. இந்த தெய்வீக திருமண நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர். மதுரை மாவட்ட நிர்வாகம், தேவஸ்தானம் மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை நகரமே ஆவலுடன் எதிர்நோக்கும் அடுத்த பெரிய விழா – சித்திரை திருவிழா! இதற்கான வேலைப்பாடுகள் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.