madurai-collector.jpg

சித்திரை திருவிழா ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிரம்

மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் ஏற்பாடுகள், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.