ITI.jpg

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி – உடனே விண்ணப்பிக்க!

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

விண்ணப்பம் செய்வது எப்படி?

  • இணையதள முகவரி: www.skilltraining.tn.gov.in
  • அல்லது நேரில் வருகை:
    • மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மூன்றாமாவடி, மதுரை
    • உதவி மையம் (Help Desk), மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையம்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.06.2025

பயிற்சி பிரிவுகள்:

  • ஓராண்டு பயிற்சிகள் – 12 பிரிவுகள்
  • ஈராண்டு பயிற்சிகள் – 12 பிரிவுகள்
  • மொத்த இருக்கைகள் – 1020

விண்ணப்ப தகுதி:

  • 8-ம் வகுப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
  • வயது வரம்பு மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் இணையதள விளக்கக் கையேட்டில் (Prospectus) கொடுக்கப்பட்டுள்ளது

அரசு வழங்கும் சலுகைகள்:

  1. மாத உதவித்தொகை ₹750
  2. தமிழ்ப்புதல்வன் / புதுமைப்பெண் திட்டம் மூலம் ₹1000 மாதம்
  3. இலவச பேருந்து பயண அட்டை
  4. விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி
  5. பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள்
  6. 2 செட் சீருடைகள் மற்றும் தையற்கூலி
  7. 1 செட் காலணிகள் (Shoe)
  8. அடையாள அட்டை

கூடுதல் நன்மைகள்:

  • பயிற்சியின் போதே பிரபல நிறுவனங்களில் அனுபவம் பெற வாய்ப்பு
  • பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு ஏற்பாடு

தொடர்புக்கு:

📞 97513 59944, 90435 70578, 0452-2903020

தகவல் வழங்கும் அதிகாரி:
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர்
முதல்வர் ரமேஸ்குமார்