சமீபத்திய

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5ஆம் தேதி கள்ளழகர் திருமாலிருஞ்சோலை திரும்பிச் சேரும் நிகழ்வுடன் நிறைவடைய உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த பெருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு முக்கிய அம்சங்களாக இருப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையின் அடையாளமாகக் கருதப்படும் சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் கோவிலின் மிகப்பெரிய ஆண்டுவிழாவாகும். இந்த விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்வது வழக்கம். திருவிழா நாட்களில் மதுரை நகரம் முழுவதும் ஆன்மிகச் சூழல் நிலவி, பல்வேறு வாகனங்களில் அம்மன் மற்றும் சுவாமி எழுந்தருளும் ஊர்வலங்கள் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெறும்.

சித்திரை திருவிழா நிகழ்வுகள்

2026ஆம் ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 28ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். அதன் பின்னர் ஏப்ரல் 29ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்று, கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவார். மே 1ஆம் தேதி கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மே 5ஆம் தேதி கள்ளழகர் திருமாலிருஞ்சோலை திரும்பிச் சேருவதுடன் விழா நிறைவடைகிறது.


2026 மதுரை சித்திரை திருவிழா – நிகழ்வுகள் அட்டவணை

நாள்தேதிமுக்கிய நிகழ்வுகள்
நாள் 1ஏப்ரல் 19, 2026கொடியேற்றம், கற்பக விருட்சம் வாகனம், சிம்ம வாகனம்
நாள் 2ஏப்ரல் 20, 2026பூத வாகனம், அன்ன வாகனம்
நாள் 3ஏப்ரல் 21, 2026கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
நாள் 4ஏப்ரல் 22, 2026தங்க பல்லக்கு
நாள் 5ஏப்ரல் 23, 2026தங்க குதிரை வாகனம், வேடர் பாரி லீலை
நாள் 6ஏப்ரல் 24, 2026தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்
நாள் 7ஏப்ரல் 25, 2026நந்திகேஸ்வரர், யாளி வாகனம்
நாள் 8ஏப்ரல் 26, 2026மீனாட்சி பட்டாபிஷேகம், வெள்ளி சிம்ஹாசன உலா
நாள் 9ஏப்ரல் 27, 2026மீனாட்சி திக் விஜயம், இந்திர விமான உலா
நாள் 10ஏப்ரல் 28, 2026மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், யானை வாகனம், புஷ்ப பல்லக்கு
நாள் 11ஏப்ரல் 29, 2026மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம், கள்ளழகர் தங்க பல்லக்கு மதுரைக்கு புறப்பாடு
நாள் 12ஏப்ரல் 30, 2026கள்ளழகர் எதிர் சேவை
நாள் 13மே 01, 2026கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல்
நாள் 14மே 02, 2026தசாவதாரம் திருக்கோலம்
நாள் 16மே 04, 2026புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருமாலிருஞ்சோலை புறப்பாடு
நாள் 17மே 05, 2026கள்ளழகர் திருமாலிருஞ்சோலை வந்து சேருதல்

திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஒழுங்காக கலந்து கொண்டு அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

ஜோஸ் அலுக்காஸ் வழங்கும் 100 செயற்கை அவயவங்கள் இலவசம்!

தகுதியுள்ள மற்றும் செயற்கை அவயவங்கள் தேவைப்படும் நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக 100 செயற்கை அவயவங்களை வழங்கும் திட்டத்தை ஜோஸ் அலுக்காஸ்…

4 நாட்கள் ago

பண்டிகை காலத்தில் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும்…

5 நாட்கள் ago

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இலவசப் பயிற்சி

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நிகழ்ச்சிகள்…

6 நாட்கள் ago

மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கட்டணமில்லா தர்ம தரிசன வரிசை முறையை மீண்டும்…

7 நாட்கள் ago

அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்…

1 வாரம் ago

B.Com, BBA முடித்தீர்களா? HCL வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) நிறுவனத்தில், பணி அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கான கிராஜுவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்களை…

1 வாரம் ago