மதுரை துரைநகர் காவல் நிலையத்தின் கீழ் போலீசாரால் கைப்பற்றப்பட்டு, உரிமை கோரப்படாமல் அரசுடைமையாக்கப்பட்ட 317 வாகனங்கள், பொது ஏலத்தில் விற்கப்பட உள்ளன. இதுகுறித்த தகவலை மதுரை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏலம் எப்போது, எங்கு?
ஏலம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் கலந்துகொள்ள முன்பதிவு கட்டாயமாகும். ஏலத்துக்கு வர விரும்பும் பொதுமக்கள், ஏப்ரல் 23-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, ரொக்கமாக முன்பணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏலத்திற்கு வர இருக்கும் வாகனங்கள் விபரம்:
- 305 இருசக்கர வாகனங்கள்
- 11 மூன்று சக்கர வாகனங்கள்
- 1 நான்கு சக்கர வாகனம்
மொத்தம் 317 வாகனங்கள் ஏலத்திற்கு வரவிருக்கின்றன.
முன்பணம் விவரம்:
- இருசக்கர வாகனங்களுக்கு: ₹2,000
- மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு: ₹5,000
முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
வாகன பார்வைக்கு வாய்ப்பு:
ஏலத்திற்கு முன் வாகனங்களை நேரில் பார்வையிட, ஏப்ரல் 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
முக்கிய குறிப்பு:
ஏலம் அரசு நியமித்த குழுவின் மேற்பார்வையில் நடைபெறும். ஏலத்தில் வெற்றி பெறும் நபர்கள், ஏல தொகையுடன் அதற்கான ஜி.எஸ்.டி. (GST) தொகையும் செலுத்த வேண்டும்.
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள:
📞 94981-79176
📞 94981-79294
📞 94981-80494
📞 94981-79211
📞 0452-2336472 / 23330070