ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி வசூல்!
முதல் முறையாக, மதுரை மாநகராட்சி ஏப்ரல் 2024 மாதத்தில் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி வசூல் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது!
5% தள்ளுபடி அறிவிப்பு காரணமாக மக்கள் பெருமளவில் வரியை செலுத்தினர்.
முக்கிய விபரங்கள்:
மொத்த வசூல்: ₹57.10 கோடி
நிலுவை வரி: ₹9.10 கோடி
நடப்பு வரி: ₹47.31 கோடி
தள்ளுபடி சலுகை: 5% (அதிகபட்சம் ₹5,000 வரை)
சொத்து எண்ணிக்கை: 3.48 லட்சம் கட்டிடங்கள்
3.5 லட்சம் நோட்டீஸ் விநியோகம்
அடுத்த இலக்கு: மாதந்தோறும் ₹25 கோடி வசூல்
மாநகராட்சி ஆணையாளர் சித்ராவின் நேரடி கண்காணிப்பில், வார்டு வாராக அதிகாரிகள் களத்தில் இறங்கி மக்கள் நேரில் சந்தித்து வசூல் செய்தனர்.
மக்கள் ஆதரவை தொடர்ந்து பெற, வாரம் வாரமாக இலகுவான வசூல் முறைகள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.