
மதுரையில் சோலமலை வணிக வளாகம்
மதுரை சோலமலை நிறுவனம், அம்பிகா தியேட்டர் வளாகத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் மாதிரிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
சோலமலை குழுமத்தின் புதிய வணிக கட்டிடம், அண்ணாநகரில் அமைந்துள்ள அம்பிகா தியேட்டர் வளாகத்தில் 1.5 லட்சம் சதுர அடியில் பிரீமியம் வர்த்தகப் பயனாளர்களுக்கு ஏற்ற இடத்தை வழங்குகிறது. இதில், கிரேட்-A தரம் கொண்ட அலுவலகங்கள் 35,000 சதுர அடியில் விரிவாக அமைக்கப்படுள்ளன.
இந்த புதிய திட்டம், வணிகச் செல்வாக்கை வளர்க்கும் நோக்கில் மதுரையில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.