
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் கோ.புதூர் 109 வது பங்குனி உற்சவ பெருவிழா
பேரன்புடையீர்,
தேதி: 01.04.2025 – 13.04.2025
வணக்கம்,
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 18-ஆம் தேதி (01.04.2025) செவ்வாய்கிழமை அன்று பூர்வபட்சம் திருதியை திதியும், பரணி நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தன்று காலை 7.35 மணிக்குத் தொடங்கி 9.00 மணிக்குள் அம்மன் உற்சவ கொடியேற்றும் விழா திருக்கோவிலில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, 01.04.2025 முதல் 13.04.2025 வரை 109-வது பங்குனி உற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.
Date | Time | Event |
---|---|---|
01.04.2025 (செவ்வாய்) | 8.00 காலை – 8.30 காலை | திருக்கோவிலில் அம்மன் உற்சவ கொடியேற்றம் |
7.35 மாலை – 8.30 மாலை | கோவிலில் நான்கு திசைகளிலும் கொடியேற்றம் | |
01.04.2025 (செவ்வாய்) – 13.04.2025 (ஞாயிறு) | 7.00 மாலை – 8.30 மாலை | கோவிலில் முன்பு கும்மியடித்தல் |
08.04.2025 (செவ்வாய்) | 4.30 மாலை – 5.30 மாலை | மதுரை அவுட் போஸ்டிலிருந்து அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல் மற்றும் தீச்சட்டி ஏந்தி நேர்த்திகடன் செலுத்துதல் |
7.00 மாலை | தமிழ்நாடு அரசு கலைச்சுடர்மணி விருது மற்றும் வாழை திரைப்பட புகழ் P. மருங்கன் அவர்களின் நையாண்டி மேளம் & கரகம் ராஜா, ராணி ஆட்டம் | |
09.04.2025 (புதன்) | 7.00 மாலை | மாபெரும் பட்டிமன்றம் |
10.04.2025 (வியாழன்) | 12.00 மாலை | மாபெரும் அன்னதானம் |
7.00 மாலை | மாபெரும் இன்னிசை கச்சேரி | |
11.04.2025 (வெள்ளி) | 6.00 மாலை | அம்மன் பூப்பல்லாக்கில் முளைப்பாரி திருவீதி உலா |
12.04.2025 (சனி) | 6.00 பகல் | வைகை ஆற்றில் முளைப்பாரி கரைத்தல் மற்றும் அம்மனுக்கு பால் குடம் எடுத்தல், வேல் குத்துதல் |
5.00 மாலை | அம்மனுக்கு பொங்கல் வைத்தல் | |
7.00 மாலை | பல்சுவை நிகழ்ச்சி |