மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வுகள் ஒன்றான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா, மே 12-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை காண தமிழ் நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🚉 சிறப்பு ரயில் விவரம்:
🔹 தாம்பரம் → மதுரை
📍 புறப்பாடு: இன்று இரவு 11.30 மணி
📍 வருகை: நாளை காலை 7.55 மணி
🔹 மதுரை → தாம்பரம்
📍 புறப்பாடு: மே 12-ம் தேதி, இரவு 11.30 மணி
📍 வருகை: மே 13, காலை 7.50 மணி
இந்த ரயில் சேவை செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் ரோடு வழியாக செல்லும்.
🎟️ டிக்கெட் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளதால், பயணிக்க விரும்புவோர் உடனே பதிவு செய்து பயன் பெறலாம்!
🚌 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன – மக்கள் திரளுக்கு மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.