vaigai_bridge.jpg

சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

மதுரை மாவட்டத்தின் முக்கியமான விழாவான சித்திரைத் திருவிழா, கடந்த மே 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் சிறப்புக்குணமான நிகழ்வான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்காக வைகை ஆற்றில் நீர் திறப்பது வழக்கமான மரபாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி, இந்த ஆண்டும் அதேபோல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று காலை வைகை ஆற்றின் மதுரை பகுதி வந்தடைந்தது. கள்ளழகர் எழுந்தருளும் பகுதிக்கு, திறக்கப்பட்ட நீர் முழுமையாக வந்தடைந்துள்ளதையும், இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மே 12 காலை 6 மணி வரை வைகை அணையிலிருந்து மதுரை நோக்கி நீர் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விழா நிகழ்வுகளுக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் உதவவுள்ளது.