alagar_kovil.jpg

அருள்மிகு கள்ளழகர் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்

ஆழகர்கோயில், ஆழ்வார்கள் பாடிய வைணவத் திருப்பதிகளுள் ஒன்று, தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. 10.5° நிலக்குறுங்கோட்டில் (latitude) மற்றும் 78.14° நிலநெடுங்கோட்டில் (longitude) எனப்படும் இடத்தில், இது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ளது. மதுரையிலிருந்து வடக்குத்திசையில் சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

ஆழ்வார்களின் பாசுரங்கள்:

ஆழ்வார்களில் ஐவர்கள் இக்கோயிலைப் பாடியுள்ளனர். அவ்வாறு பாடியவர்களில் முதல்வராக பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் அடங்குவர். மொத்தம், 108 பாசுரங்களில் இக்கோயிலைப் பாடியுள்ளனர்.

Alwargal.jpg

பெரியாழ்வார் மூன்று திருமொழிகளிலும், ஆண்டாள் திருமொழியிலும், நம்மாழ்வார் நான்கு திருமொழிகளிலும், திருமங்கையாழ்வார் இரண்டு திருமொழிகளிலும் இக்கோயிலைப் பற்றி பாடியுள்ளனர். பூதத்தாழ்வார் இரண்டு பாசுரங்களில் மட்டும் இத்தலத்தை குறிப்பிட்டுள்ளார். பூதத்தாழ்வார் தவிர, மற்ற நால்வரும் பிற பாசுரங்களில் மொத்தம் பதினான்கு இடங்களில் இத்தலத்தை குறிப்பிட்டுள்ளனர்.

கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று ஆண்டாள் தவம் செய்த இடம் அழகர்மலை. வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக, அழகர் கோயிலில் மட்டுமே ஆண்டாளை அமர்ந்த நிலையில் தரிசிக்க முடியும். மற்ற அனைத்து கோயில்களிலும், ஆண்டாள் நின்ற நிலையாக மட்டுமே காட்சி அளிப்பார். மேலும், கண்ணனை கணவனாக அடைந்தால் நூறு அண்டா அக்காரவடிசில் செய்து படைப்பதாக ஆண்டாள் விரும்பிய இடமும் அழகர்மலை தான்.

அழகர்மலையில் வேண்டுதல் வைத்த சில நாட்களிலேயே ஆண்டாள், ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதருடன் ஐக்கியமாகிவிட்டாள். அதன் பிறகு அவருடைய வேண்டுதலை அழகர்மலைக்கு வந்த ராமானுஜர் நிறைவேற்றி வைத்தார் என புராணங்கள் சொல்கின்றன. இப்போதும் மதுரை சித்திரை திருவிழாவின் போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வழக்கம் உள்ளது.

சித்திரைத் திருவிழா:

மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்களும் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் ஆகும். சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கப்பட்டன. இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த தேனூர் ஊரிலுள்ள ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாக நடைபெற்று வருகிறது. பின்னாளில், இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும் விழாவாக மாற்றப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து திரும்பி விடுவதாகப் புதிய கதையும் உருவாக்கப்பட்டது. உண்மையில், மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறான் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம். அழகர் குறைந்தது ( 70 கிலோமீட்டர் ) 160 மணி நேரம் பயணிக்கிறார்.

அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி:

karupasamy.jpg

இங்கு உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்குமான ஒரு கதை உள்ளது. அதன்படி, கள்ளழகரின் சக்தியை குறைத்து, அவரை தன் இடத்திற்கு அழைத்து செல்ல திட்டமிட்டு, கருப்பண்ணசாமி தலைமையில் 18 பேர் அங்கு சென்றனர். அப்போது, வந்தவர்கள் அழகர் அழகில் மயங்கி 18 படிகளாக மாறியதாகவும் கூறப்படுகிறது. கருப்பண்ணசாமி, தலைமைக் காவலராக இங்கு அமர்ந்து விட்டதாக நம்பப்படுகிறது.

நூபுர கங்கையின் சரித்திரம்:

பூலோகம் முதல் சத்யலோகமான ப்ரம்மலோகம் வரை தன் தவத்தாலும் பலத்தாலும் கைப்பற்றியிருந்த பலி சக்ரவர்த்தியிடம் வாமனராய் அவதரித்த பெருமாள், மூன்று அடி தானாகக் கேட்டார். பலி சம்மதிக்க, பெருமாள் ஒரு அடி பூலோகம், மற்றொரு அடி ப்ரம்மலோகம் என அளந்துவிட்டு, “இன்னும் ஒரு அடி எங்கே?” என்று கேட்டார். இதனால், பலி சக்ரவர்த்தி பெருமாளிடம் தன்னையே அடியாக சமர்ப்பித்தார்.

திருவிக்ரம பெருமாள் உலகை தாண்டி தனது கால்களால் அளந்த போது, ப்ரம்மலோகத்தில் இருந்த ப்ரம்மா அவரின் பாதங்களை தனது கமண்டலத்தில் உள்ள நீரால் கழுவினார் என புராணங்களில் கூறப்படுகிறது. அப்போது, பெருமாள் தன் கணுக்காலில் சாற்றிக் கொண்டிருந்த நூபுரம் ப்ரம்மலோகத்தின் கீழ் உள்ள துருவ மண்டலத்தில் விழுந்தது. அதன் பிறகு, அது சொர்க்கலோகத்தை சென்றபோது, அது மந்தாகினி என்று நங்கையாகி, உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது என சில புராணங்கள் கூறுகின்றன.

noopuragangai.jpg

பகீரதன் என்ற அரசன், தனது முன்னோர்களின் பாவங்களைப் பவன செய்ய பிரம்மாவிடம் வேண்டி, மந்தாகினியை பூமிக்கு அழைத்துவந்தான். அந்த மந்தாகினி தான் இங்கு கங்கையாக ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மந்தாகினியின் வேகத்தை கட்டுப்படுத்த சிவபெருமான் அவளை தன் சிரசில் தாங்கினார். அந்த கங்கை, அழகர்மலையில் “நூபுர கங்கை” என்றும் “சிலம்பாரா” என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு “வனகிரி” மற்றும் “ரிஷபாத்ரி” என்ற பெயர்களும் உண்டு.

திருவிழாக்கள்:

மாதம்திருவிழாவின் பெயர்
சித்திரைகொட்டகை உற்சவம்,
கோடைத் திருநாள்.
வைகாசிவசந்த உற்சவம்.
ஆனிபெரியபெருமாள் ஜேஷ்டாபிஷேகம்
முப்பழ உற்சவம்.
ஆடிகருட சேவை,
திருவாடிப் பூரம்,
திருத்தேர் உற்சவம்.
ஆவணிதிருப்பவித்திர உற்சவம்,
உறியடி உற்சவம்.
புரட்டாசிவிநாயக சதுர்த்தி,
கருடசேவை,
நவராத்திரி,
விஜயதசமி.
ஐப்பசிதீபாவளி
எண்ணெய்க்காப்பு.
கார்த்திகைதிருக்கார்த்திகை தீபம்.
மார்கழிதிருவத்யயன உற்சவம்
(பகல்பத்து-இராப்பத்து).
தைசட்டத்தேர் உற்சவம்,
கனு உற்சவம்,
தைலப் பிரதிஷ்டை.
மாசிதெப்ப உற்சவம்,
கஜேந்திர மோக்ஷம்.
பங்குனிதிருக்கல்யாண உற்சவம்