மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 2026-ஆம் ஆண்டுக்கான ஆவணிமூலத் திருவிழா ஆகஸ்ட் 16 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பத்து நாள் திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்களை நினைவுகூரும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவங்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெறும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் மற்றும் செங்கோல் அருள் பெறும் நிகழ்ச்சி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயில் நிர்வாகம் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
நிகழ்வுகள், தேதிகள், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், பக்தர்கள்
16.08.2026 – கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை
17.08.2026 – நாரைக்கு முக்தி கொடுத்த லீலை
18.08.2026 – மாணிக்கம் விற்ற லீலை
19.08.2026 – தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை
20.08.2026 – உலவாக்கோட்டை அருளிய லீலை
21.08.2026 – கால் மாறி ஆடிய லீலை, பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, சீருது, வலைவீசி சமயப் பூசல் தீர்த்த லீலை
22.08.2026 – கால் மாறி ஆடிய லீலை, சீருது, அருள்மிகு சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
23.08.2026 – நரியைப் பரியாக்கிய லீலை
24.08.2026 – பிட்டுக்கு மண் சுமந்த லீலை
25.08.2026 – விறகு விற்ற லீலை
திருவிழா அட்டவணையின்படி, ஆகஸ்ட் 22-ஆம் தேதி காலை 7.05 மணி முதல் 7.29 மணி வரை அருள்மிகு சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடைபெறுவதுடன், அதனைத் தொடர்ந்து பக்தர்கள் செங்கோல் அருள் பெறும் நிகழ்வும் நடைபெறும் என்று கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பில் நிலவி வருவதாகக் கூறப்படும் உட்கட்சிப் போட்டி தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.…
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (அக்டோபர் 29)…
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் பொதுப் போக்குவரத்தை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், அவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில், உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர்…
மதுரை மாநகரின் வணிக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் புதிய வரவாக, CDR Mall of Madurai பொதுமக்களின் ஷாப்பிங் மற்றும்…
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நீர்நிலைகள்…