சுற்றுலா

காந்தி நினைவு அருங்காட்சியகம்

மதுரை மாநகரின் தவறவிடக் கூடாத இடங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகம், ராணி மங்கம்மாளுக்கு சொந்தமான பேரெழில் கொண்ட பழைய அரண்மனையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம், மிக உயரிய சுதந்திரப் போராட்ட தியாகங்களின் பிரதிபலிப்பாகவும், காந்திய இயக்கத்தை பற்றி நமக்கு அறிமுகம் செய்யும் சாளரமாகவும், பண்டைய கால பொருட்களின் புதையல் ஆகவும் செயல்படுகிறது.

மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் ஒரு துண்டிக்கப்பட முடியாத பிணைப்பு இருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமான மீனாட்சி திருக்கோவிலின் உள்ளே ஹரிஜன மக்களை அனுமதிக்கும் படலம் மதுரையில் நடந்தது. இந்த அருங்காட்சியகம் தன்னகத்தே கொண்டுள்ள அரண்மனையானது, கிறிஸ்துவுக்குப் பிறகு 1670ம் ஆண்டு நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது. சேவா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையின் மாதிரியாக இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய கட்டிடத்தின் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றை புரட்டும் பொழுது காந்தியடிகள் எழுதிய பழைய கடிதங்களும் பல ஆவணக் குறும்படங்களின் தொகுப்புகளும் காணப்படுகின்றன.

பிரதான கட்டிடத்தின் தெற்கே அமைந்துள்ள திறந்தவெளி திரையரங்கம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு தாயகமாக விளங்குகிறது. இங்கு நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்கும்போது, உங்களது பயணத்தை திட்டமிடுவது சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி விழா ஐந்து நாட்கள் கொண்டாடப்படுவதும் இதன் முக்கிய நிகழ்வாகும்.

அருங்காட்சியகத்தில் ஒரு பிரத்தியேகப் பகுதி காந்தியின் வாழ்க்கையின் சிறந்த சில அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளது. “இந்தியா சுதந்திரத்திற்காக போராடுகிறது” என்ற பகுதி, சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆணி வேர்களை அழகான படங்கள் மற்றும் ஓவியங்களுடன் விவரிக்கின்றன. இந்த பகுதியை அரண்மனையின் தர்பார் மண்டபம் ஒதுக்கப்பட்டுள்ளது. காந்தியின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இங்கு பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் மூன்றாவது பகுதி, காந்தி தனது வாழ்நாளில் பயன்படுத்திய நூறு அன்றாட சாதனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இதில், ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் மற்றும் அவர் படுகொலை செய்யப்பட்ட நாளில் அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த துணியும் போன்ற முக்கிய பொருட்கள் காணப்படுகின்றன.

Thoonganagaram Admin

Share
Published by
Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் சோகம்… கனமழையில் சுவர் இடிந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…

18 மணி நேரங்கள் ago

மதுரை சுற்றுலாவில் மெகா ஹிட் – வெளிநாட்டவர்கள் வருகை அதிகரிப்பு!

2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…

18 மணி நேரங்கள் ago

மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி – ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்!

பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

18 மணி நேரங்கள் ago

செம வாய்ப்பு! IOB வங்கியில் வேலை – தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!

இண்டியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 2025–26 காலாண்டிற்கு 400 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களை நிரப்ப…

19 மணி நேரங்கள் ago

மே 20, 2025 மதுரையில் தங்கம் விலை பெரும் சரிவு

மதுரை / கோவை:இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை சரிவும் ஏற்றமும் காணப்பட்ட நிலையில்,…

19 மணி நேரங்கள் ago

சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

மதுரை மாவட்டத்தின் முக்கியமான விழாவான சித்திரைத் திருவிழா, கடந்த மே 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் சிறப்புக்குணமான…

2 வாரங்கள் ago