திருப்பரங்குன்றம்: தமிழ் புத்தாண்டையும் சித்திரை மாதத்தையும் முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நிலத்தில், விவசாயிகள் பாரம்பரிய முறையில் பொன்னேர் உழுதனர்.
குரோதி வருடம் முடிந்து, விசுவாசுவ வருடம் பிறந்ததை ஒட்டி நேற்று திருப்பரங்குன்றம் பகுதியில் 7 கண்மாய்களுக்கு சார்ந்த விவசாயிகள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் முன்பு பூச்சூடிய தார்க்குச்சிகளை வைத்து வழிபாட்டை மேற்கொண்டு, அதனை கையில் ஏந்தியவாறு கிரிவலமாகச் சென்று, மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலங்களுக்குச் சென்றனர்.
அங்கு, 8 மாடுகள் பூட்டிய நான்கு ஏர் கலப்பைகளைக் கொண்டு, பாரம்பரிய பொன்னேர் உழுதல் முறையில் நிலத்தை உழுது, புதிய அறுவடைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடிய விவசாயப் பணிகளை ஆரம்பித்தனர்.
பின்னர், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் வளாகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் பானாங்குளம், செவ்வந்திகுளம், ஆரியன்குளம், தென்கால், சேமட்டான், குறுக்கிட்டான், சூறாவளிக்குளம் உள்ளிட்ட 7 கண்மாய்களின் விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு, விவசாய மரபுகளின் முக்கியத்துவத்தையும், தமிழர் பண்பாட்டு விழாவாகிய தமிழ் புத்தாண்டின் ஆழ்ந்த சமுதாயப் பிணைப்பையும் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம், 330 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்கு தயாராகிக்…
மதுரை மாநகர வளர்ச்சிக்கேற்ப, பொதுமக்கள் மற்றும் வணிக நலன் கருத்தில் கொண்டு 13,662 புதிய மின் இணைப்புகள் 2024–25ம் ஆண்டில்…
மதுரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவில், பக்தர்கள் ஒரே திருவிழாவுக்குள் செலுத்திய காணிக்கை ரூ.1.06 கோடிக்கு மேல் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
கோடை விடுமுறைக்குப் பிள்ளைகளை எங்கே அழைத்துச் செல்லலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா? இந்திய ரயில்வேயின் கிளை நிறுவனமான IRCTC (Indian…
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது, அந்த பகுதியில்…
மதுரை: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில்,…